முன்னொரு காலத்தில் வடிவேலு தான் கையில் 10-15 படங்களுடன் உலாவந்தார், இப்போது அவரை விட சற்று அதிகமாகவே முன்னுக்கு வந்துவிட்டார் சந்தானம், சமீபகாலமாக வடிவேலும் இல்லாததால் சந்தானத்திற்கு போட்டிக்கு அவ்வளவாக யாரும் இல்லை என்றே சொல்லலாம். செம பிஸியாகிவிட்ட சந்தானம் கையில் இப்போதைக்கு சுமார் 15 படங்கள் இருக்கின்றன.
நீதானே என் பொன்வசந்தம், போடா போடி, தாண்டவம், அலெக்ஸ் பாண்டியன், மாப்பிள்ளை விநாயகர், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும், பூலோகம், 555, ஓங்காரம், வாலு, ஐ, சேட்டை, ஜே.கே. எனும் நண்பன் வாழ்க்கை, என்றென்றும் புன்னகை, கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஆல் இன் ஆல் அழகு ராஜா… என்று ஒரு டஜனுக்கு மேலாக நீள்கிறது சந்தானம் நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் லிஸ்ட்.